Sunday, December 26, 2010

மன்மதன் அம்பு!!

கமலஹாசன் படம் தியேட்டர்ல பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு படம் பார்க்க தியேட்டர்க்கு போனேன் .டிக்கெட் 60 ரூபா கொடுத்து உள்ளே போனேன்.. மொத்தம் ஒரு 26 பேரு இருந்தோம் ..எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு ..ஆனா கவலைபடாம போய் உட்கார்ந்தேன் .
fan எங்கே இருக்குனு பார்த்து அங்கே போய் உட்கார்ந்தேன்..கடைசி சீட்டுக்கு முன்னாடி சீட்டு..என் வரிசையிலும் எனக்கு பின்னாடியும் யாருமே
இல்லை .கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு..அப்ப தான் ஒரு பையனும் ஒரு பொண்ணும் எனக்கு பின்னாடி ஓரத்துல உட்கார்ந்தாங்க..
சில மொக்கை விளம்பரங்கள் போட்டுட்டு படம் ஆரம்பிச்சானுங்க..


ஆரம்பத்துல ஒரு 20 நிமிஷம் கமலஹாசன் இல்லை..அது வரைக்கும் த்ரிஷா .மாதவன் பத்திய flashback ஓடுனுச்சு..த்ரிஷா ஒரு நடிகையாவே நடிச்சி இருக்காங்க..அவருக்கும் மாதவனுக்கும் காதல்.. ஒருநாள் ஷூட்டிங்க்கு மாதவனும் அவங்க அம்மா உஷா உதுப்பும் போறாங்க..அங்கே தான் சூரியா - த்ரிஷா டான்ஸ்.அங்கே த்ரிஷா மேல மாதவனுக்கு சந்தேகம் வருது ..அது வளர்ந்து கொடைக்கானல் -ல அவங்க கார்ல போறப்ப ரெண்டு பேருக்கும் சண்டை வருது ..அந்த நேரத்துல த்ரிஷா காரை இன்னொரு கார் மேல இடிச்சிடுறாங்க..திரும்பி பார்த்த அந்த காரை காணும் ..
த்ரிஷா வெளிநாட்டுல இருக்குற தன் தோழி சங்கீதாவோட இருக்க பாரிஸ் போறாங்க ...அங்கே த்ரிஷாவ உளவு பார்க்க மாதவன் வச்ச ஆள் தான் கமல் ..!! கமல் தன்னோட நண்பன் ஆபரேஷன்-க்காக உளவு பாக்குறார்...அங்கே த்ரிஷா வை பற்றி தவறாக மாதவனிடம் கூறுகிறார்..அதனால் ஏற்படும் விளைவுகள் என செல்கிறது .. கொடைக்கானல் -ல த்ரிஷா  மோதின கார் கமலோட கார் என்பதும், அதுல கமல் மனைவி இறந்துட்டாங்க என்பதும் கொஞ்சம் திருப்பம்..மாதவன் மேல உள்ள வெறுப்பு மற்றும் கமல் மேல உள்ள அனுதாபம் ரெண்டும் த்ரிஷாவை கமல்ல காதலிக்க வைக்குது ..இதுக்கு பின் பல குழப்பங்களுடன் படம் நிறைவு அடைகிறது..

TAIL PIECE :
  •   இண்டர்வல்-ல ஒரு 8 பேரு எஸ்கேப் ..எனக்கு பின்னாடி இருந்த அந்த ஜோடியும் இண்டர்வல்க்கு அப்புறம் எஸ்கேப் (அவங்க வேலை முடிஞ்சுது போல)
  • இந்த படம் பாதி இங்கிலீஷ் படம் ... கமலஹாசன் நல்லாபேசுனாலே புரிஞ்சுக்கு கஷ்டபடுவோம்..இதுல நிறைய எடத்துல அவர் என்ன பேசுறார்னே புரியல ..
  • கமலோட ரசிகர்ளுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்குதாம்(??!!) ..மத்தவங்களுக்கு சுத்தமான மொக்கை .
  • படத்தின் திரைக்கதை புரியாத புதிர்!! ரவிக்குமார் இப்படி ஏமாத்துவர்னு நான் கனவுலையும் நெனைக்கல!!
  • 60 ரூபா போய்டுச்சேனு வெளியே வந்தேன்..அங்கே வெளியே அடுத்த ஷோக்காக
    காத்திருந்தவங்கள   பார்த்துட்டு சிரிப்பு தான் வந்துச்சு!!
    மன்மதன் அம்பு  - உடைந்த கம்பு