Thursday, January 20, 2011

சிறுத்தை - ஒரு "சி.டி" பார்வை ..!

சிறுத்தைய மாயாஜால்- ல பார்க்கலாம்னு நினைச்சேன் ..அப்புறம் தான் தெரிஞ்சுது அங்கே டிக்கெட் 120  ரூபாய்.. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் கையில  கிடைச்சுது சிறுத்தை சி.டி .. ஓரளவு நல்ல பிரிண்ட் .. எல்லோரும் படம் சூப்பர்னு சொன்னதால ஆர்வம் அதிகாமாகவே  இருந்துச்சு ..!
வாங்க சீக்கிரம் படத்துக்கு போவோம்..!! 


இதான் கண்ணு கதை :     

கார்த்தியோட முதல் இரட்டை  வேட படம்..

ரெத்தினவேல் பாண்டியன்...

நேர்மையும் வீரமும் குறையாத போலீஸ் அதிகாரி ..!ஆந்திராவில் உள்ள ஒரு பயங்கரமா ரவுடியின் மகனை கைது செய்கிறார்... அதனால் பல பிரச்சனைகள்.. ஒரு கட்டத்தில் அந்த மகன் இறந்து விடுகிறார்..! இதனால் கோபமான ரவுடியின் தம்பி கார்த்தியை ஒரு கோவில் திருவிழாவில் கத்தியால் குத்துகிறார்!
____
ராக்கெட் ராஜா

உலக மகா திருடன் .. சந்தானத்துடன் திருட போகும் காட்சிகளில் எல்லாம் நகைச்சுவைக்கு  பஞ்சமே இல்லை..! தமன்னா உடன் காதல் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன..!
ஒரு நாள் இவர் கையில் ஒரு குழந்தை கிடைக்கிறது .. அது ராஜாவை பார்த்து "அப்பா" என்று சொல்கிறது!!

குழந்தையால்  தமன்னாவுடன் காதல் முறிகிறது..!இது யார் குழந்தை என்ற விடையை தேடும் பொது தான் அது ரத்தினவேல் பாண்டியனின் குழந்தை என்பது தெரிய வருகிறது..! ரத்தினவேல் பாண்டியன் உயிருடன் இருக்கிறார் என்பதும் , அவர் குழந்தையை காப்பற்றவே ராஜாவிடம் அதை சேர்த்ததாகவும் ஒரு போலீஸ் அதிகாரி சொல்கிறார்..!

ஒரு நாள் குழந்தையுடன் செல்லும் ராஜாவை கொலை செய்ய ஆந்திர ரவுடிகள் முயல்கிறார்கள்.. அப்போது அங்கே ரத்தினவேல் பாண்டியன் வந்து அனைவரையும் துவம்சம் செய்கிறார்..! அங்கே அவர் பேசும் வசனங்கள்  தீப்பொறியாய் தெறிக்கின்றன .!அங்கயே அவர் இறந்தும் விடுகிறார்..!

பின் ராஜா, ரெத்தினவேல் பாண்டியன் போல் ஆந்திரா சென்று அந்த இரண்டு ரவுடிகளையும் எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதி கதை!!




கார்த்தி நடிப்பில் ஒரு வெறி தெரிகிறது .. மூன்று பேரை சேர்த்து இழுத்து செல்லும் அந்த ரெத்தினவேல் பாண்டியனின் ஆரம்ப காட்சியே அட்டகாசம்..ஒரு தெனாவட்டு , ஒரு திமிரு , ஒரு கெத்து .. எல்லாம் சேர்ந்த ரெத்தினவேல் பாண்டியனாக கார்த்தி கலக்கி இருக்கிறார் ..!அவர் நடிப்பை பார்க்கும் போது நாம் அறியாமலே நமக்குள் ஒரு உணர்வு..! பேசுகிற ஒவ்வொவொரு வசனமும்  தீப்பொறி  தான்  ..!
"ராக்கெட் ராஜா " கேரக்டர் பல இடங்களில் ரஜினியின் "போக்கிரி ராஜாவை" நினைவுப்படுத்தினாலும் ரசிக்க வைக்கிறது..!!  சந்தானம் - கார்த்தி ஜோடி வெற்றி அடைந்துள்ளது ..! படம் முழுவதும்  நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை..! கிளைமாக்ஸ்- ல் சந்தானத்தின் காமெடி.. சரவெடி ..! சந்தானத்தை  படத்தின் ரெண்டாவது ஹீரோ என்று தான் சொல்ல வேண்டும்..!
தமன்னா படத்துக்கு ஊறுகாய் போல தான்..! பாடல்களில் மட்டும் அதிக நேரம் இருக்கிறார்..! கிளைமாக்ஸ் -ல் பேசும் வசனம் ரொம்ப ஓவர்..!பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. அதை இன்னும் அழகாக படமாக்கி  இருக்கலாம்..!!

தெலுங்கு வில்லன் என்றாலே இப்படி அழுக்காக தான் இருப்பான் என்பதை  இன்பத்தை இந்த படத்திலும் தொடர்ந்து இருக்கிறார்கள்.. இதை தெலுங்கு சினிமாக்காரர்கள் விட்டே ரொம்ப நாள் ஆகிறது..! படத்தில் மசாலா கொஞ்சம் அதிகம் தான்..!

இது இயக்குனருக்கு முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை..!! சிவாவுக்கு வாழ்த்துக்கள்..!

மொத்தத்தில்

சிறுத்தை - வசூல் பாய்ச்சல்..!

( என்ன " TAIL PIECE" காணுமேன்னு  பாக்குறிங்களா.. அதன் சொன்னேன்ல சி.டி - ல பார்த்தேன்னு  ..அதனால கிடையாது..!)