Monday, January 3, 2011

ஜூ.வி - க்கு ஏன் இவ்வளவு கோபம் ?

ஸ்பெக்ட்ரம் புயலால் இன்றைய இந்திய அரசியலே ஆட்டம் கண்டு கொண்டிருக்க இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி லாபம் பார்க்கும் கீழ்த்தரமான செயல்களை தமிழகத்தில் உள்ள சில புலனாய்வு இதழ்கள் செய்கின்றன என்பது வருத்தம் அளிக்கிறது .தங்களுடைய இதழ் அதிகமாக விற்பனை ஆக வேண்டும் என்ற நோக்கோடு செய்யப்படும் அட்டைப்பட வடிவமைப்பு .ஒரு மோசமான யுக்தி !!



"நடுநிலை" என்பதில் இருந்து முழுவதுமாக தாழ்ந்து விட்டது ஜூ.வி..

ஜூ.வி-க்கு லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இல்லை என்பது உண்மை . ஆனால், ராசாவுக்கும் ஜூ.வி-க்கும் இடையே நடந்த பனிபோர்களை மனதில் வைத்து கொண்டு தக்க சமயத்தை எதிர் பார்த்தபோது தான் மீண்டும் "ஸ்பெக்ட்ரம்".

இதையே வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட ஜூ.வி தன் கற்பனா சக்திக்கு எல்லை வைக்காமல் புதிய செய்திகளை(?!)வெளியிட்டது .

"3-ஜி யில் மெகா ஊழல் "
"Wimax விவகாரம் வெடிக்குமா ?"
"பிளவுப்பட்டது கூட்டணி ..புத்தாண்டிற்குள் புது செய்தி "

என காழ்புணர்ச்சியோடு செய்திகளை வெளியிட்டது .வெளியிடுகிறது . 

ஜூ.வி அ.தி.மு.க  அனுதாபி ஆகிவிட்டது என சில நண்பர்கள் சொன்னார்கள்.ஆனால் அது உண்மையல்ல .ராசாவின் மேல் உள்ள கோபம்,தி.மு.க-வின் மேல் உள்ள வெறுப்பு  காரணமாய் அ.தி.மு.கவை ஆதரிக்கும் கட்டாயம் ஜூ.விக்கு.

 

"தமிழக மக்களின் நாடித்துடிப்பு " என்று சொல்லி கொண்டு அ.தி.மு.கவின் "இதயத்துடிப்பு " ஆகி போனது என்ன கொடுமை? 

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பல புலனாய்வு இதழ்கள் இருக்கின்றன. நடுநிலை இதழாக இருந்த ஜூ.வி தன்னுடைய நிறத்தை மாற்றி கொண்டு இருப்பது வாசகர்களுக்கு செய்யும் துரோகம் !!

தன்னுடைய சொந்த கோபங்களை மாற்றிக்கொண்டு பொது நலனை மனதில் வைத்து மீண்டும் நடுநிலைக்கு திரும்பும் என்று நம்புகிறேன். 

எத்தனையோ வாசகர்கள் ஜூ.வி-யின் மீது நம்பிக்கை 
வைத்துள்ளார்கள்.நானும் ஒருவன்!!

நல்ல நிலைக்கு திரும்புக!!
நடுநிலை செய்தி தருக!!