Wednesday, December 21, 2011

நடிகர் விஜய்க்கு ஒரு உண்மை தமிழனின் கடிதம் ..

நடிகர் விஜய்-க்கு வணக்கம் .... .. .

இது தங்களின் சினிமாவை தாண்டிய வாழ்கையை பற்றியது .. 


எங்கயோ இருந்து .. தந்தையான சந்திரசேகர் - ஆல் தமிழ் சினிமா-வுக்கு அறிமுகப்படுதப்படிர்கள் . அன்று முதல் பல வெற்றி தோல்வி படங்களில் நடித்திர்கள். உங்களுக்கு என்று ஒரு கூட்டம் உருவாகியது . அந்த கூட்டத்தை பாது உங்களை விட உங்கள் அப்பா அதிகம் சந்தோஷப்பட்டார் . அரசியலிலும் உங்களை அறிமுகப்படுத்த உங்கள் அப்பா முயற்சிகளை மேற்கொண்டார். முதலாவதாக , தி.மு.க - விடம்.. 

2006 - தி.மு.க வெற்றி பெற்ற சில மணி நேரத்தில் உங்கள் அப்பா உங்களை இழுத்து கொண்டு அறிவாலயம் சென்றார். அங்கே கலைஞருடன் சிரித்து கொண்டு போஸ் கொடுத்திர்கள் . அதற்கு பின் உங்களை ஒரு  தி.மு.க  - விசுவாசியாக காட்ட உங்க அப்பா நினைத்தார் .நீங்களும் தலை ஆட்டினிர்கள் . பல விஷயங்களில்  தி.மு.க -வுடன் ஒத்து போனிர்கள் . திடீர் என்று , இது தான் மன்ற கொடி என்று என்றிர்கள் . பின், மன்றகளை மக்கள் இயக்கமாக மாற்றுவதாக உங்கள் அப்பா அறிவித்தார் . 

நினைவிருக்கட்டும் , இந்த காலக்கட்டத்தில் உங்களை யாரும் அரசியலுக்கு வா என்று அழைக்கவில்லை. அழையா விருந்தாளியாக அரசியலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டிர்கள் . மன்னிக்கவும் , உங்கள் அப்பா மேற்கொண்டார் .நீங்கள் அதை வேடிக்கை பாத்திர்கள்.

சில வருடங்கள் சென்றன.. 

உங்கள் படம் காவலனை  தி.மு.க - வாரிசுகள் வெளி வரவிடாமல் சில இடங்களில் தடுத்தார்கள் . அவர்கள் ஆட்சியில் இருந்ததால் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. உடனே, உங்கள் அப்பா ஜெயலலிதா-வை சென்று பார்த்தார். பல பிரச்சனைகளுக்கு இடையே காவலன்  வெளியாகி  தயாரிப்பாளர் கையை சுடாமல் ஓடியது .. 

உங்கள் தனிப்பட்ட விஷயத்தை பெரிதாக்கி, ரசிகர்களிடம் அதை பரப்ப செய்திர்கள் . சில இடங்களில் திடீர் என்று பொதுக்கூட்டம் போட்டிர்கள் . கூட்டம் கூடியது. உங்கள் அப்பா ஜம்மென்று மேடை அருகே அமர ... நீங்கள் எதற்காக கூட்டம் போட்டிர்களோ அந்த விஷயத்தை முதல் அரைமணி நேரம் பேசி விட்டு உங்கள் தனிப்பட்ட விஷயத்திற்கு வந்திர்கள் . அப்பாவி ரசிகர்களை உசுப்ப செய்திர்கள் . 

அதன் தொடர்ச்சியாக ,தேர்தலில் ..  அ.தி.மு.க ஜெயிக்கும் என்று பல பத்திரிகைகள் கணித்த நிலையில் ,  அ.தி.மு.க -வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிதிர்கள். உங்கள் ரசிகர்களை  அ.தி.மு.க வுக்கு ஓட்டு போட சொன்னிர்கள் .  அ.தி.மு.க  வெற்றி பெற்றது .. அடுத்த "எம்.ஜி.ஆர் " நான் தான் என்று நீங்களே உங்கள் தலையில் ஏற்றி கொண்டிர்கள் . அதனால், அது வரை "ரஜினி" பாணி என்று சொல்லி கொண்டிருந்த நீங்கள் .. நான் நடிப்பது "எம்.ஜி.ஆர்" பாணியில் என்றிர்கள் ..

 அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த போது   வலிய போய் நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்திர்கள் .அப்பட்டமான அரசியல் !! 

இதோ இங்கே முல்லை பெரியாறு விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?  கேரளா-வில் மார்கெட்டை இழந்து விடுவோம் என்ற பயம் தானே காரணம்? 

தமிழர் நலனை விட காசு தானே முக்கியம் ??தமிழர்களை அங்கே ஓட ஓட விரட்டுகிறார்கள் .. நீங்கள் உங்கள் படம் ஓட வேண்டும் என்றே விரும்புகிறிர்கள் .. 

இல்லை , இன்னும் உங்கள் அப்பா கண்னசைக்கவில்லையா..??? "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா ..." என்ற வீர வசனமெல்லாம்  சினிமாவில் மட்டும் தானா?

தனியாக ஒரு முடிவும் எடுக்க முடியாத கோழையா நீங்கள்..?? இல்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும்..

இல்லையென்றால் ,  

நீங்கள் சென்னையை விட்டு வெளியேறி திருவனந்தபுரதிலயே தங்கி விடுங்கள். அங்கே இருந்தே தமிழ் படத்தில் நடியுங்கள் . கவலை படாதிர்கள் , அப்போதும் உங்கள் ரசிகன் ஏதோ ஒரு சமாதனம் சொல்லி உங்கள் படத்தை ஓட்டி கொண்டு தான் இருப்பான் ..ஏனென்றால் , உங்கள் ரசிகர்களை அந்த அளவுக்கு முட்டாள்களாக்கி வைத்துள்ளிர்கள்..உங்கள் ரசிகர்களுக்கு உங்கள் படங்களை தவிர வேறு படங்களை ரசிக்க தெரியவில்லை..ஜீரணிக்க முடியவில்லை .. அந்த அளவுக்கு அவர்களின் ரசனையை கெடுத்து வைத்து உள்ளீர்கள் .. நடுநிலையான ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு குறைவு ..அதனால் நீங்கள் இப்படி செய்து தான் ஆக வேண்டும் .. வேறு வழி இல்லை என்பது என்னமோ உண்மை தான்!!

நீங்கள் உங்கள் அப்பா பேச்சை கேட்டு நடக்கும் வரை உங்களால் மின்ன முடியாது என்பது நிதர்சனமான மெய்,. !!

இது உங்களை புண்படுத்த எழுதப்படவில்லை ..ஆனால், இது தான் உண்மை ..

நீங்கள் கோழையா ? தைரியமனவரா ? என்று ஒவ்வொரு தமிழனும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறான்.. 

இப்படிக்கு ,

அந்த தமிழர்களில் ஒருவன் ..!