Friday, December 23, 2011

"அணை"யாத பிரச்னை : எரியும் தமிழ் நெஞ்சங்கள்

இதோ தமிழகம் தன்னை தற்காத்து கொள்ள அடுத்த போராட்டதிற்கு தயாராகி விட்டது .. போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்ட தமிழர்களுக்கு இது ஒன்றும்  புதிது அல்ல..!இலங்கையிலும் சரி ,கேரளாவிலும் சரி நம்மை தற்காத்து கொள்ளவே நாம் போராடுகிறோம் . அர்த்தமற்ற போராட்டங்கள் நம்மால் ஆரம்பிக்கப்பட்டதற்கான சான்றுகள் மிக குறைவு ..

இந்த உலகத்தில் இந்தியன் என்று சொன்னால் அடிக்கிறார்கள் ..இந்தியாவில் தமிழன் என்று சொன்னால் அடிக்கிறார்கள்..இது நம்முடைய சாபக்கேடு..
நாம் திருப்பி அடித்தாலோ பேசினாலோ இந்திய இறையாண்மைக்கு ((?!)  அல்லவே பங்கம் வந்து விடுகிறது ..
தமிழனாய் பிறந்ததை தவிர வேறு என்ன தவறு செய்தோம் என்று இந்நேரம் அங்குள்ள தமிழன் ஒவ்வொருவனும் வெந்து நொந்து செத்துக்கொண்டிருப்பானே ..!
இது தானே நம் இனத்தின் மறுக்க முடியாத இன்றைய நிலை.. அதை நினைக்கும் போதே வருத்தம் தொண்டையை அடைக்கிறது..

முல்லை பெரியாறு விவகாரத்தில் எல்லாம் அம்சங்களும் உண்மை நிலையை தெளிவாய் விளக்கும் போது மலையாளிகள் துடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது..
ஒரு அணை வலுவானதாக இருக்கும் போது ஏன் அதை உடைக்க வேண்டும் ?? கேரளாவில் வரப்போகிற இடைதேர்தல் தானே உடைக்க சொல்கிறது ..!
அந்த ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று விட்டால் ஆட்சி கட்டிலில் நிம்மதியாக இருக்கலாம்..மாறாக , கம்யூனிஸ்ட் - கள் வெற்றி பெற்றால் ஆட்சியே இழுபறி ஆகிவிடும் ..இதற்காக , காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் நேரிடையாக மோதி கொள்ளாமல் தமிழர்களோடு மோதி ஆதாயம் தேட முயல்கிறார்கள்..

"தமிழர் நலனா?" கிலோ என்ன விலை என்று கேட்கிற கட்சி காங்கிரஸ். மாநிலத்திற்கு மாநிலம் ஒரு கொள்கையை வைத்து கொண்டு கம்யூனிசம் என்பதையே  கொச்சைப்படுத்துபவர்கள் இன்றைய கம்யூனிஸ்ட்-கள் . 
இங்கும் சிலர் , 

"புதிய அணை கட்டினால் தான் தண்ணீர் தருவதாக சொல்கிறார்களே ..அப்புறம் என்ன ? வீணாக நாம் எதற்கு சண்டை போடவேண்டும் ?" என்பவர்கள், ஒரு கேள்வி கேட்டால் தன் நிலையை சொல்ல தெரியாமல் 'கருத்து இல்லை' என்று பதிவு செய்யும் அறியாமல் அதிகம் பேசும் அறிவுஜீவிகள் . 
நமக்கும் தண்ணீருக்கும் உள்ள தொடர்பே முல்லைப்பெரியார் தான்!! அதை இடித்து விட்டால் நமக்கும் அதில்  உரிமையே இல்லாமல் போய்விடும்.
கேரளா அரசு புதிய அணை கட்டுமானம் பற்றி விளக்கி உள்ள அறிக்கையில் "அந்த தண்ணீர் இரு மாநிலங்களுக்கு சொந்தமானது அல்ல. ஒரு மாநிலத்துக்கே சொந்தமானது " என குறிப்பிட்டுள்ளது . இந்த அரசா நமக்கு தண்ணீர் தர போகிறது ?? இது ஒரு நாடகம்..

அங்கே தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் . இன்று வரை உயிருக்கு பயந்து தமிழகத்துக்கு ஓடி வந்து கொண்டிருக்கிறானே அவனுக்கு தெரியும் அந்த வலி..!அதுவும் , அங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்களின் நிலை ரொம்ப மோசம். அதன் உரிமையாளர்களால் சொல்லமுடியாத அளவுக்கு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம் .. 12  வயது சிறுமி என்ன பாவம் செய்தாள்??  அவளுக்கு நடந்தது என்ன என்று கூட தெரியாமல் அவள் சொல்லும் போது ரத்தக்குழாய்கள் வெடிக்கின்றன..அவர்கள் தொடாத இடமே இல்லையாம் அவளிடம்.. !!இதற்கு மேல் அவளுக்கு நேர்ந்ததை சொல்லும் அளவுக்கு  என் நெஞ்சம் இன்னும் கல்லாகவில்லை .தன் வீரத்தை ஒரு சிறுமியிடம் காண்பித்தானே அவனெல்லாம் ஒரு ஆண்மகனா??

இங்கே , கோவையில் மலையாளிகளின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன . அந்த சமயம் , ஒரு பேக்கிரி கடையில் மலையாள பெண் இருந்தாள் , அவளிடம் "கடை மீது கல் வீச போகிறோம் ,உள்ளே போய்விடுங்கள் ,இல்லையென்றால் அடிபடும் " என்று சொன்னானே அவன் ஆண்மகன் ..!தமிழ் மகன்.!நாம் அத்தகைய ஒழுக்கத்தை என்றுமே மீறியதில்லை. ..! எல்லா பிரதிகளையும் 5 -  மணி நேரத்தில் விற்க துடிக்கும் சில வார இதழ்களை தவிர மற்றவை பொறுப்புடன் செயல்படுவது கொஞ்சம் ஆறுதல்.!
எல்லாம் போதும்..! நீ எந்த நடிர்களின் கட் -அவுட்களுக்கு பாலாலும் தேனாலும் அபிஷேகம் செய்து கொண்டிருந்தாயோ அவனெல்லாம் கட்-அவுட் போலவே அசையாமல் அமைதியாக இருக்கிறான்..!இனி அவனையெல்லாம் நம்புவதில் அர்த்தமில்லை ..!நீயே போராடு..! போராடு என்றால் களத்தில் இறங்கி தான் போராட வேண்டும் என்று அர்த்தம் அல்ல..!இணையத்திலும் இணைந்து போராடலாம்..இதை பற்றிய உண்மை செய்திகளை பரப்பு ..இதை பற்றிய தெளிவு இல்லாதவர்களிடம் தெளிவாக விளக்கு ..! இதுவே  நம் கடமை..!